மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு பாமக ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு பாமக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமகவின் தலைமை நிலையம் இன்று (ஜுன் 22) வெளியிட்டுள்ள செய்தியில், “ பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திருமதி. திரவுபதி முர்மு அவர்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்தக் கோரிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திருமதி. திரவுபதி முர்மு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் ஆளுனராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

திருமதி. திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், இரண்டாவது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமகவுக்கு தமிழக சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்களும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணியும் இருக்கிறார்கள். இவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு வாக்களிப்பார்கள்.

வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022