மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

ஓபிஎஸ் தப்பு மேல் தப்பு செய்கிறார்: ஜெயக்குமார்

ஓபிஎஸ் தப்பு மேல் தப்பு செய்கிறார்: ஜெயக்குமார்

அதிமுகவில் அராஜகப் போக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜூன் 22) காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுகவுக்குள் அராஜகப்போக்கு இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டு வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் தேவை, அந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் தேவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து ஈபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவினரும் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று தீர்மானத்தை இயற்றி அதை ஈபிஎஸிடம் கொடுத்திருக்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவில் எந்த அராஜகப்போக்கும் கிடையாது. ஓபிஎஸை பொறுத்தவரை தப்பு மேல் தப்பு செய்கிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சேர்வதில்லை என்ற எம்ஜிஆர் பாடல் நினைவுக்கு வருகிறது. தவறான பாதையில் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார். இதை மன கஷ்ட்டத்தோடு சொல்கிறேன்.

பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் உட்பட அனைவரும் கட்டுப்பட்டு ஆக வேண்டும். ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என எனக்கு ஜோதிடம் பார்க்க தெரியாது. அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். தொண்டர்களின் எண்ணத்துக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். பொதுக்குழுவில் கலந்துகொள்வாரா இல்லையா என அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022