மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

சூது கவ்வும்- தர்மம் வெல்லும்: பொதுக்குழு பற்றி பன்னீர்

சூது கவ்வும்- தர்மம் வெல்லும்: பொதுக்குழு பற்றி பன்னீர்

அதிமுக பொதுக்குழு நாளை ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சியை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டது.   இந்த நிலையில் எடப்பாடியை பொதுச் செயலாளர் என்று அடைமொழியிட்டு முழக்கங்களும், போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடிதான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு  ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அவர் செல்லவில்லை.  பன்னீருக்கு ஆதரவான மகளிர் அணியினர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஒற்றைத் தலைமை மூலம் அதிமுகவை அழிப்பதாக  ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினர். அப்போது தொண்டர் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயல போலீஸார் அவரை காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவத்தை ஒட்டி இன்று (ஜூன் 22) காலை ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில்,  “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் என்பது சர்வாதிகாரமாக கூட்டப் பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

-வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022