மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

பொதுக்குழு : போலீசார் ஆய்வு!

பொதுக்குழு : போலீசார் ஆய்வு!

அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் போலீசார் இன்று (ஜூன் 21) மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை நடத்தத் திட்டவட்டமாக இருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி திருவேற்காடு காவல்நிலையத்தில் பதில் அளித்தார்.

இந்தச்சூழலில், சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் விளக்கம் கேட்டனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டுத் தொடரப்பட்ட வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி பிரியா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள அனைவருக்கும் இம்மனுவின் நகலை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 21 ஜுன் 2022