மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

எஸ்.பி.வேலுமணிக்கு ஆவணங்களை வழங்க உத்தரவு!

எஸ்.பி.வேலுமணிக்கு  ஆவணங்களை வழங்க உத்தரவு!

டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை ஆவணங்களை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்புக்கு வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 21) உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை கோவை மாநகராட்சிகளில் வழங்கிய டெண்டரில் முறைகேடு செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஆட்சியில் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்ததாகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாறிய பிறகு இவ்வழக்கு மீண்டும் கடந்த நவம்பர் 8, 2021 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வேலுமணி மீதான வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.பி வேலுமணி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை அறிக்கை நகலை அவரிடம் கொடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அளித்த ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை நகலை முன்னாள் அமைச்சருக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

வேலுமணி தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்ற வசமுள்ள அறிக்கையை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 21 ஜுன் 2022