மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வந்தது. இன்னும் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில், 17 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனினும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா அக்கட்சியிலிருந்து விலகினார்.

இதுகுறித்து இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா ஜி எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 21 ஜுன் 2022