மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யோகா கொண்டாட்டம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யோகா கொண்டாட்டம்!

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழாண்டு யோகா தின விழா பிரம்மாண்டமாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டது. நாடு முழுவதும் 75 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு யோகா தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழாண்டு, “யோகா மனிதக்குலத்திற்கானது” என்ற கருப்பொருள் மூலம் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கர்நாடகா வந்துள்ள பிரதமர் மோடி, இன்று மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த கொண்டாட்டத்தில் 15,000க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

யோகாசனம் செய்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், “யோகா நமது பிரபஞ்சத்திற்கே அமைதியைத் தருகிறது. மனிதக்குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கிறது. யோகாவிலிருந்து வரும் அமைதி தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், நம் சமூகம், தேசம், உலகம் மற்றும் பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொடுக்கிறது. யோகா நமக்குள் இருக்கும் அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார். கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு யோகாசனங்களைச் செய்த அவர், “நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காகத் தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்” என்று பேசினார்.

புதுச்சேரி காந்தித்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், “வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது” என்றார்.

பசிபிக் பெருங்கடலின் நடுவில் சர்வதேச டேட்லைன் பகுதியில் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சத்புராவில், இந்தியக் கடற்படையின் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

செவ்வாய் 21 ஜுன் 2022