நள்ளிரவு வரை ராகுலிடம் விசாரணை: மீண்டும் சம்மன்!

politics

அமலாக்கத் துறையில் 5ஆவது நாளாக இன்று (ஜூன் 21) மீண்டும் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி ராகுல் காந்தி முதல் நாளாக அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் தனது தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருடன் இருக்க வேண்டும். எனவே, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அமலாக்கத் துறையிடம் ராகுல்காந்தி அவகாசம் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்று அமலாக்கத்துறை மூன்று நாள் அவகாசம் வழங்கியது. தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.

நேற்று இரவு 12.30 மணி வரையில் அதாவது 12 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருக்கிறது. விசாரணை முடிந்து நள்ளிரவில் தான் ராகுல் காந்தி வீடு திரும்பியிருக்கிறார். 4 நாட்களில் அவரிடம் ஏறத்தாழ 40 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 5-வது நாளாக மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. இதனடிப்படையில் ராகுல் இன்றும் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். அதுபோன்று அமலாக்கத்துறையின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *