பிளஸ் டூ தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவை இன்று காலை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில், 8,06,277 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 4,21,622 மாணவிகள் 3,85,655 பேர் ஆவர். இதில் 93.76 சதவிகிதம் அதாவது 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,106 (96.32%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,49,893(90.96%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 5.36% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் வாரியாக
அரசுப் பள்ளிகள் -89.06%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.87%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் -99.15%
இருபாலர் பள்ளிகள் - 94.05%
பெண்கள் பள்ளிகள் - 96.37%
ஆண்கள் பள்ளிகள் - 86.60%
மாவட்ட வாரியாக
97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2ஆவது இடத்தில் உள்ளது.
97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆவது இடத்தில் உள்ளது.
-பிரியா