மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 ஜுன் 2022

நளினியின் விடுதலை வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!

நளினியின் விடுதலை வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரனின் விடுதலை தொடர்பான மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 17) காலை தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. நளினி, முருகன் , ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநரின் முடிவு வரும் வரை காத்திருக்காமல் 2018ல் தமிழக அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் நளினி தரப்பில், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் இரண்டரை ஆண்டுகளாக முடிவெடுக்காமலிருந்ததும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என்று வாதிடப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, ‘விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் போல் உயர் நீதிமன்றத்தால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இவ்விவகாரத்துக்கு உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. அதில், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதே சமயத்தில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை குறித்து உயர் நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியதோடு, அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று, உயர் நீதிமன்றத்தால் நளினியையும், ரவிச்சந்திரனையும் விடுதலை செய்து உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 17 ஜுன் 2022