மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 ஜுன் 2022

ஓபிஎஸ் பிரஸ்மீட்: டிவியில் பார்த்த எடப்பாடி ரியாக்‌ஷன்

ஓபிஎஸ் பிரஸ்மீட்: டிவியில் பார்த்த எடப்பாடி ரியாக்‌ஷன்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை கொதி நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் சூட்டை நேற்று (ஜூன் 16) இரவு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி மேலும் அதிகமாக்கியது.

எடப்பாடி பழனிசாமி பற்றி நேரடியாக புகார் சொல்லாவிட்டாலும், அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரான தன்னை கலந்து ஆலோசிக்காமல் ஒற்றைத் தலைமை பற்றி பேசப்பட்டது எனக் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். மேலும் தன்னை ஓரங்கட்டமுடியாது என்றும், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறினார்.

நேற்று காலையே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு சென்றுவிட்டார். அங்கே துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.,முனுசாமி, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். இரவு 8 மணிக்கு சென்னையில் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு டிவிக்களில் லைவ் ஆக ஒளிபரப்பான நிலையில், தகவல் அறிந்து அதை தனது வீட்டில் இருந்தபடியே முழுதும் பார்த்தார் எடப்பாடி. அப்போது அவருடன் கே.பி.முனுசாமி, இளங்கோவன் மற்றும் சில லோக்கல் நிர்வாகிகள் இருந்தனர்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பை அடுத்து எடப்பாடி வீட்டு முன்பு செய்தியாளர்கள் குவியத் தொடங்கினார்கள். சென்னையில் ஓபிஎஸ் பேசியதற்கு சேலத்தில் எடப்பாடி பதில் அளிப்பார் என்று நினைத்து அவர் வீட்டை முற்றுகையிட்டனர்.

இரவு 9.30 மணி வரை எடப்பாடியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தனர் பத்திரிகையாளர்கள். இதை அறிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை பார்த்து கும்பிட்டு, ‘இப்ப ஒண்ணும் பேட்டி வேணாம். 23 ஆம் தேதி பாத்துக்கலாம்’ என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

இன்று (ஜூன் 17) அதிகாலையே குளித்துவிட்டு காலை 6 மணிக்கெல்லாம் காரில் ஏறி திருவண்ணாமலை புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 17 ஜுன் 2022