மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 ஜுன் 2022

நுபுர் ஷர்மாமவை கைது செய்: வெள்ளி தொழுகை போராட்டம்!

நுபுர் ஷர்மாமவை கைது செய்: வெள்ளி தொழுகை போராட்டம்!

பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று(ஜூன் 10) இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பாஜவைச் சேர்ந்த ஒருவரின் கருத்தால் இந்திய அரசு இஸ்லாமிய நாடுகளிடம் மன்னிப்பு கோரியது. பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் ஷேர் செய்த நவின் ஜிண்டாலும் நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் நுபுர் ஷர்மா மற்றும் நவின் ஜிண்டாலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஈரோடு, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. நுபுல் ஷர்மா, நவின் ஜிண்டால் இருவரையும் உபா சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு கிழக்கு மாவட்டம் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, “நபிகள் நாயகத்தை ஒரு பெண் இழிவுபடுத்திவிட்டார் என்பதை விட இந்தியாவை இழிவுபடுத்திவிட்டார் என்று கருதுகிறோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

டெல்லி

டெல்லியில் ஜாமா மசூதியில் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் நுபுர் ஷர்மாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர் ஷர்மாவை கைது செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்துக்கு மஸ்ஜித் கமிட்டியால் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் கூறினார். திடீரென இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்ததால், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட திணறினர். எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. நுபுர் ஷர்மாவின் எரிச்சலூட்டும் கருத்துக்களுக்கு எதிராக பிரயாக்ராஜ் உட்பட உ.பி.யின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பிரயாக்ராஜ் ஏடிஜிபியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா

பெலாகவி பகுதியில் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவ பொம்மை ஒன்றுக்கு சேலை கட்டி நுபுர் ஷர்மா புகைப்படம் ஒட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர நவி மும்பையில நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் ஏராளமானோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கல் வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவை காவல்துறை விதித்துள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் ஹவுரா பகுதியில் குவிந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 10 ஜுன் 2022