மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 ஜுன் 2022

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஆவின் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் சார்பில் பால், நெய், வெண்ணெய், தயிர் போன்ற பலவிதமான பால் உப பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வெளிச்சந்தையை விட ஆவினில் விலை குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ஆவின் பூத்துகளில் அதிகளவு பால், நெய் போன்ற பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் சமீப நாட்களாக குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் பூத்துகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை என பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், “ திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆவில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அரை லிட்டர் தயிர் விலை ரூ.27 இல் இருந்து ரூ.30 ஆகவும், ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை ரூ. 515 இல் இருந்து ரூ.535 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா். சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் நாள்தோறும் பணம் கொடுத்து பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் எல்லாம் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் தற்போது ஆவின் பூத்துகளில் கிடைப்பதில்லை. 1 கிலோ நெய் தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. சிறிய அளவிலான பால்கோவா பெரும்பாலான ஆவின் பாலகங்களில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். எனவே தினக்கூலி வேலைக்கு செல்பவர்களால் ஒரு கிலோ நெய்யை மொத்தமாக 540 ரூபாய் கொடுத்து வாங்க முடியாது. சிறிய நெய் பாக்கெட்டுகளை விற்றால் பயனுள்ளதாக இருக்கும்.

அதுபோன்று, ஆவின் நுகா்வோா்களின் எண்ணிக்கை உயா்ந்துவிட்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆவின் பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இந்தக் கோரிக்கையினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, ஆவின் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 6 ஜுன் 2022