மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஜுன் 2022

நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை எதிர்த்த அனைத்துக்கட்சியினர்!

நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை எதிர்த்த அனைத்துக்கட்சியினர்!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்களுடன் அரசியல் கட்சியினரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் மார்த்தாண்டம் - கருங்கல் சாலை விரிகோட்டில் ரயில்வே கிராஸிங் உள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்கள் சென்று வரும்போதும், குழித்துறை ரயில் நிலைய சிக்னல் கிடைக்காத நேரங்களிலும் அடிக்கடி கிராஸிங்கில் கேட் பூட்டப்படுகிறது. இதனால், பொதுமக்களும் பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதி வழியாக மேம்பாலம் அமைக்க நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றுப்பாதையில் மேம்பாலம் அமைக்க நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் பலமுறை வந்தபோது பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மாவட்ட பொறியாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நில அளவீடு பணிக்காக வந்தனர்.

இதையறிந்த காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏவும் அங்கு வந்தார். அப்போது, மாற்றுப்பாதையில் மேம்பாலம் அமைக்க கூடாது, விரிகோடு வழியாகத்தான் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் மேம்பாலத்தை மாற்றுப்பாதையில் அமைக்க கூடாது, அதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, அந்த வழியாக சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணியைக் கைவிட்டு விட்டு திரும்பிச் சென்றனர். இதையடுத்து பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-ராஜ்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 4 ஜுன் 2022