மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஜுன் 2022

நாங்கள் ஒற்றுமை கூட்டம்: முன்னாள் அமைச்சருக்கு பாஜக பதில்!

நாங்கள் ஒற்றுமை கூட்டம்: முன்னாள் அமைச்சருக்கு பாஜக பதில்!

கடந்த சில நாட்களாகக் கூட்டணிக் கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ள பார்க்கிறது என்று கூறியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, ரெய்டுக்கு பயந்து அதிமுக செயல்படுவது இல்லை என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துரைசாமி எந்த கட்சியிலிருந்து எந்த கட்சிக்கு மாறியவர் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 4) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், " தமிழகத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகள் தான். எங்களுடைய பார்வையில் அதிமுக தான் எதிர்க்கட்சி. எங்களுக்கு ஆயிரக் கணக்கான கிளைகளும் உள்ளன.

எங்கேயாவது கூட்டம் போட்டால் ஆயிரம், இரண்டாயிரம் பேரைத் திரட்டுவது பெரிதல்ல. நாங்கள் எல்லாம் காக்கா கூட்டம் இல்லை, கொள்கை கூட்டம். இரை போட்டால் காக்கா கூடத்தான் செய்யும். இரை முடிந்ததும் பறந்துவிடும்.

வி.பி.துரைசாமி எல்லாம் விமர்சனம் செய்கிறார். அவர் எதற்காக அந்த கட்சிக்குப் போனார் என்று தெரியாதா? அதிமுக மீது யாராவது துரும்பு கொண்டு எறிந்தால் அவர்கள் மீது தூணை கொண்டு எறிவோம்.

நாகூரில் காலையில் அதிகளவில் புறாக்கள் கூடும். அந்தப் புறாக்கள் எல்லாம் மாலையில் வேளாங்கண்ணிக்குச் சென்றுவிடும். இதுபோன்று இடம் மாறும் புறாக்கள் எல்லாம் இருக்கின்றன.

முருகன் ஜி வந்தார், வேல் பிடித்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. தமிழிசை சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோன்று தனக்கும் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அண்ணாமலைக்கும் இருக்கலாம்” என்று பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதோடு, நான் ஒரு சவால் விடுகிறேன், அனைத்து கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுவோம். தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். 2016ல் தனித்து நின்று வந்தோம். எல்லா கட்சியும் தயார் என்றால் தேர்தலை நடத்தி மக்கள் யார் பக்கம் என்று பார்த்து விடுவோம் என்று சவால் விடுத்தார்.

செல்லூர் ராஜின் பேச்சு தொடர்பாகத் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில், “காக்காவின் மகத்துவம் அவருக்குப் புரியாது. நம்முடைய மூதாதையர்கள் எல்லாம் காக்காவாக இருப்பதால் தான் எல்லா சாமியையும் கும்பிடும்போது காக்காவுக்கு முதலில் சாப்பாடு வைத்து விட்டுத்தான் பிறகு நாம் சாப்பிடும் ஊரில் இருக்கிறோம். பல கட்சிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் காக்கா கூட்டம் பாஜகவில் இல்லை.

காக்கா கூட்டத்தை பாருங்க, ஒண்ணா இருக்க கத்துக்குங்க என்ற பாடல் உள்ளது. அதை செல்லூர் ராஜு மறந்துவிட்டார் போல. விரட்டி விட்டதும் ஓடும் காக்கா கூட்டம் நாங்கள் இல்லை. பாஜக ஒற்றுமை கூட்டம்.

தனித்துப் போட்டியிடுவது பற்றி அவர் பேசியிருக்கிறார். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் 488 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதா இல்லையா?. சென்னை மாநகராட்சியில் 17 இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதிமுக மூன்றாம் இடத்திற்குச் சென்றது. அப்போது பாஜகவைத் தனித்துப் போட்டியிட விட்டது தவறு என்று அதிமுக நிர்வாகிகளே ஈபிஎஸிடம் சொன்ன தகவல் எல்லாம் எங்களுக்கு வந்தது” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 4 ஜுன் 2022