மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 ஜுன் 2022

ஆதினங்களுக்கு உண்டான சிறப்புச் செய்யப்படும்: சேகர்பாபு

ஆதினங்களுக்கு உண்டான சிறப்புச் செய்யப்படும்: சேகர்பாபு

பட்டின பிரவேசம் மூலம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுர ஆதீன மடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை சென்றார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை மயிலாடுதுறைக்கு வருகை தந்த அவர், திருக்கடையூரில் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்குப் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயில் கொடிமரத்தின் அருகே அமைச்சர் சேகர்பாபு கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார்.

அமிர்தகடேஸ்வரர், கலாசம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்றார். அங்கும் பூரண கும்ப மரியாதையுடன் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுர ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆலோசனை செய்தார். தொடர்ந்து தருமபுரம் மடத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு விழா மற்றும் ஆதீனம் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றார்.

இதன் பின்னர் தருமபுர ஆதீனம் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

"வரும் ஆகஸ்ட் மாதம் தருமபுரம் கல்லூரியின் பவளவிழா வருகிறது. இக்கல்லூரியின் 25வது ஆண்டு விழாவில் கலைஞர் கலந்துகொண்டார். 50வது ஆண்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டார். தற்போது 75வது ஆண்டு விழா வருகிறது. ஒவ்வொரு 25 ஆண்டு விழாவிலும் கழக ஆட்சி இருப்பதால் இந்த முறை, முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “சுவாமியின் விருப்பத்தைத் தமிழக முதல்வரிடம் கொண்டு செல்வோம். அவர் வழிகாட்டுதலின்படி இந்தப் பவள விழாவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

ஆதினங்களுடன் ஒரு சுமுகமான நல்லிணக்கத்தோடு அரசு இருக்கும். சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் ஆதினங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். தீட்சிதர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனைகள் என ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக தருமபுர பட்டின பிரவேசத்துக்கு அரசு தடை விதித்தது. அதற்கு எதிராக பாஜகவினர், இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆதீனங்கள் முதல்வரைச் சந்தித்தது என அரசியலில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மே 22ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று தருமபுர ஆதினத்தை அமைச்சர் சந்தித்தது முக்கியத் துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

-பிரியா

பட்டினப்பிரவேசம்: அரசியல் பரபரப்பில் ஆதீனம்!

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 4 ஜுன் 2022