மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 ஜுன் 2022

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் 5ஆம் தேதி வெளியாகும்: அண்ணாமலை

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் 5ஆம் தேதி வெளியாகும்: அண்ணாமலை

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5ஆம் தேதி வெளியிடுவோம் என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.86,000 கோடி ஜிஎஸ்டி பங்கு தொகையை விடுவித்தது. அதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.9,608 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது மத்திய அமைச்சராக உள்ள முருகன் கடுமையாக உழைத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரவையில் மூன்று இலாகாக்களைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. இதனால் தாராபுரம் மக்களுக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மாற்றத்துக்கான முன்னேற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. வருகிற 2024ஆம் ஆண்டு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவர் கட்டாயம் நாடாளுமன்றம் செல்வார்” என்று பேசியவர்,

தொடர்ந்து, “பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்கூட எந்த ஒரு அமைச்சர் மீதும் சிறிதளவு கூட குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கின்றனர். ஆனால், திமுக அமைச்சர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5ஆம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம். வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்துக்கு பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏக்கள் கட்டாயம் செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 3 ஜுன் 2022