மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்டுகளை வழங்கும் அமெரிக்கா!

உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்டுகளை வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாளை நெருங்கி வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் மீது உக்ரைன் படைகளும் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரையும் கார்கீவ் நகரையும் ரஷ்யப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.

இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு, எந்த நாடுகளும் ஆயுத உதவி அளிக்கக் கூடாது என்று ரஷ்ய பிரதமர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அதி நவீன ராக்கெட் ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீது ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று உக்ரைன் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆகையால் அமெரிக்கா அளிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவைத் தாக்க பயன்படுத்தாமல், உக்ரைனில் ரஷ்யப் படை முன்னேற்றத்தைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் அதிநவீன ராக்கெட்டுகளை அளிப்பதாக முடிவெடுத்துள்ளேன். அமெரிக்கா வழங்கும் அதிநவீன பீரங்கி ராக்கெட்டுகள் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்க உதவும். இவை உக்ரைனில் ரஷ்யப் படை முன்னேற்றத்தை தடுக்க உதவியாக இருக்கும்" என்று கூறினார். மேலும் விமான கண்காணிப்பு ரேடார்கள், உடல் கவசங்கள் மற்றும் வெடிமருந்துகள் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 2 ஜுன் 2022