மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

தமிழக கல்விக் கொள்கை குழு: ஓராண்டுக்குள் அறிக்கை!

தமிழக கல்விக் கொள்கை குழு: ஓராண்டுக்குள் அறிக்கை!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காகக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் அதற்கு மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை பற்றிப் படித்துவிட்டுப் பேச வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழா ஒன்றில் கூறியிருந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி படித்துவிட்டு தான் பேசுகிறோம் என்று பதிலளித்திருந்தார். நேற்று முன்தினம், சென்னை நந்தனம் ஆடவர் அரசினர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விரைவில் தமிழக கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநில கல்வி கொள்கைக்காக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், சவீதா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன், தரமணி கணித அறிவியல் நிறுவன முன்னாள் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்ட ஆணைய உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் மற்றும் அருணா ரத்தினம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் பவுண்டேஷன் தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசாணையில் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக் காலத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அதை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் துணை குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 2 ஜுன் 2022