மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

கலைஞர் பிறந்தநாள்: தயாராகும் திமுக!

கலைஞர் பிறந்தநாள்: தயாராகும் திமுக!

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் நாளை தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படவுள்ளது.

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் நகரம், மாநகர வார்டுகளில் கலைஞர் படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.

ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 99ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவது பற்றி, சென்னை அறிவாலயத்தில் கடந்த மே 28ஆம் தேதி அன்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், “ஜூன் 3 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம். அவரவர் மாவட்டங்களில் அவரவர் தொகுதிகளிலிருந்து அனைத்து கிராமங்களிலும் நகரம், மாநகரங்களில் உள்ள வார்டுகளில் கழகத்தின் கொடியேற்றி அன்னதானம் வழங்கி, ஏழை எளியோர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கி, ஒவ்வொரு பொறுப்பாளர்களும் உங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்து கலைஞர் பிறந்தநாளை மக்கள் விழாவாக கொண்டாடுங்கள்" என ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை கலைஞரின் படத்தை மாநிலம் முழுவதும் வைத்து மக்கள் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள் திமுகவினர். முக்கியமாகக் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை அறிமுகம் செய்ய ஆலோசனைகளும் நடந்து வருகிறதாம்.

-வணங்காமுடி

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 2 ஜுன் 2022