மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 ஜுன் 2022

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு  9 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 நிரந்தர நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஒன்பது பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், ஒரு கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஆறு மாத காலத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கியும் உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும், கோவிந்தராஜூலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்தி குமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜ், மஞ்சுளா ராமராஜூ நல்லய்ய, தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு கூடுதல் நீதிபதியான ஏ.ஏ.நக்கீரன் 03.12.2022 வரை தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக இருப்பார் என்று மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 2 ஜுன் 2022