மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 ஜுன் 2022

கூட்டணியோடு பாமக ஆட்சி: அன்புமணி

கூட்டணியோடு பாமக ஆட்சி: அன்புமணி

பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாமக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாமக 2.0 என்ற திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக கடந்த மே 28ம் தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக முன்னாள் பொருளாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும், விஜயகாந்த் மகன் விஜய்பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "எங்களுடைய நோக்கமே 2026ல் தமிழ் நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்பதுதான். எங்களுடைய இலக்கு பாமக ஆட்சிக்கு வரவேண்டும். அது தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது, கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். எங்களைப் போன்ற ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்து, தேர்தலை அணுகுவோம்” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 1 ஜுன் 2022