மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 மே 2022

தலைமைக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்: உதயநிதி

தலைமைக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்: உதயநிதி

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்குத் தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என்று திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் திமுக கிழக்கு மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி தலைமைக்குத் தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அதில், “திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம் வழங்கிய வாய்ப்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராகத் தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுவதெனப் பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில், என் மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்ம சங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதைக் கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதைக் கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 31 மே 2022