மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 மே 2022

ஒரே நாளில் 2 மா.செ.களை நீக்கிய அன்புமணி

ஒரே நாளில் 2 மா.செ.களை நீக்கிய அன்புமணி

பா.ம.க. தலைவராக அன்புமணி ஆனதையடுத்து அக்கட்சியில் முதல் நடவடிக்கையாக இரண்டு மாவட்டச்செயலாளர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பா.ம.க.வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் பின்னர் பேட்டிகளிலும் புதிய தொனியில் பேசினார், அன்புமணி.

அவருடைய தந்தையும் பா.ம.க.வின் நிறுவனருமான இராமதாஸ் அவருக்கென ஒரு பாணியை வைத்திருப்பார். பல நேரம் கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கறாரான உத்தரவுகளையும் எச்சரிக்கைகளையும் விடுப்பது அவரின் இயல்பு. அதைப்போலவே அப்படி நீக்கப்பட்டவர்கள், நீங்கியவர்களை மீண்டும் கட்சிக்குள் அரவணைத்துச் சேர்த்துக்கொள்ளவும் அவர் தயங்கமாட்டார்.

கட்சியைத் தொடங்கியபோது அதன் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன், பல கட்சிகளுக்குத் தாவி, கடைசியாக பா.ம.க.வுக்கு வந்தபோது அவரை வரவேற்று இணைத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வுகள் தொடரும் நிலையில், புதிய தலைவராக அன்புமணி பதவியேற்ற பின்னர், இன்று காலை அவரின் இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஒன்றில், வடசென்னை, மைய மாவட்டச்செயலாளராக இருந்துவரும் வியாசர்பாடியைச் சேர்ந்த மா.வெங்கடேசப்பெருமாள், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இனி அவர் கட்சியில் உறுப்பினராக மட்டும் இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்சென்னை கிழக்கு பாமக மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து மந்தைவெளியைச் சேர்ந்த ஸ்ரீராம் ஐயரும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று இன்னொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால்தான் அவர்கள், பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ம.க. 2.0 என்பது சரியாகப் பணியாற்றாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று அன்புமணி கூறி ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், வந்தவுடன் இரண்டு மாவட்டச்செயலாளர்களை அவர் நீக்கியுள்ளது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

செவ்வாய் 31 மே 2022