மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 மே 2022

கோட்டையை நோக்கி பாஜக பேரணி!

கோட்டையை நோக்கி பாஜக பேரணி!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் தொடங்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. அதைத்தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு, வரியைக் குறைக்க வில்லை. பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலங்களும் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய வரி முறைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்.

2014 முதல் எட்டு வருடங்களாக பெட்ரோல் டீசல் மீதான வரியைப் பல மடங்கு உயர்த்தி விட்டு தற்போது 50 சதவிகிதம் மட்டுமே குறைத்துள்ளது. மத்திய அரசு வரியை உயர்த்தும் போது ஒரு முறை கூட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்கவில்லை. ஆனால் தற்போது வரியைக் குறைக்கும் போது மட்டும் மாநில அரசும் குறைக்க வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க வேண்டும். அதுபோன்று சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று எச்சரித்திருந்தார்.

அதன்படி இன்று அவரது தலைமையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் கூடினர். “திராவிட மாடல் இது தானா?, திராவிட மாடல் என்ன ஆச்சு? சினிமாவில் மட்டும் நெஞ்சுக்கு நீதி உண்மையில் இங்கு உறங்குது நீதி... தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு? மக்களுக்கு எங்கே நீதி? பொய் வாக்குறுதி அளித்த மாநில அரசே பெட்ரோல், டீசல் விலையை குறைத்திடு என கோஷங்கள் எழுப்பி 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் தான் முதல்வர் டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார்” என்று பேசினார்.

பாஜகவின் போராட்டத்தால் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகம் சுற்றியும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 31 மே 2022