மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 மே 2022

பாமக 2.0: அன்புமணியின் புதிய திட்டம்!

பாமக 2.0: அன்புமணியின் புதிய திட்டம்!

பாமகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், கிராமங்களுக்குச் சென்று மக்களோடு தங்கி அரசியல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

1998 ஜனவரி 1ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டுக் காலம் வழி நடத்திவந்த ஜி.கே மணிக்குக் கடந்த மே 24ஆம் தேதி சென்னையில் வெள்ளி விழா நடத்தப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் மே 28ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதில், புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை நியமித்தனர். ஜி.கே.மணி கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார்.

தலைமைப் பொறுப்பேற்ற பிறகு அன்புமணி, திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். நேற்று (மே 30) தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்கத்தைத் துவக்கி வைத்து, 'பாட்டாளி மாடல் 2.0' திட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்தார்.

பழைய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளை விட்டுவிடாமல் அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனைகள் கேட்டு அரசியல் செய்யவேண்டும், எதிர்வரும் காலங்களில் படிப்பு, சோஷியல் மீடியா சார்ந்து அரசியல் செய்யவேண்டும் என்று பள்ளி ஆசிரியர் போல

வகுப்பு நடத்தினார்.

அதன் பிறகு மூத்த முக்கிய நிர்வாகிகளுடன் பேசிய அன்புமணி, ‘சென்னை தி நகரில் தயாராகி வரும் பாமக தலைமை அலுவலகத்துக்கு விரைவில் திறப்பு விழா நடத்த வேண்டும், அந்த அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும். அங்கே ஐடி விங்க் சிறப்பாகச் செயல்படுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இளைஞர் அணி, தம்பிகள் படை, தங்கைகள் படை, வணிகர்கள் அணி போன்ற அணிகளைத் தீவிரமாகப் பலப்படுத்த வேண்டும். தமிழக மக்கள் அதிமுக நடத்திய ஆட்சி மீதும், திமுக நடத்துகின்ற ஆட்சி மீதும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். அதை பாமக பயன் படுத்திக்கொள்ளவேண்டும்’ என்று ஆலோசனைகளை வழங்கினார்.

அடுத்த கட்டமாகக் கிராமங்களை நோக்கிச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 25 கிராமம் சென்று பாட்டாளிகளைச் சந்தித்து, ஊர் ஊராகச் சென்று கொடியேற்றுவது, இரவானதும் ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு பாட்டாளி வீட்டில் தங்கி அவர்களுடன் கலந்துரையாடல் செய்துவிட்டு, அவர்கள் வீட்டில் சாப்பிட்டு இரவு ஓய்வுயெடுத்துவிட்டு, மறுநாள் பகல் முழுவதும் அவர்களுடன் பொழுது கழித்துவிட்டு, அன்று மாலையில் அங்குள்ள இளைஞர்களுடன் விளையாட்டில் கலந்துகொண்டு, மறுநாள் வேறொரு கிராமத்தில் தங்கிச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாகத் தலித் பகுதிகளுக்குச் சென்று அவர்களிடம் உள்ள கசப்புணர்வை போக்குவதற்கான வேலைகளை செய்து வருவதாவும், அன்புமணியின் பாட்டாளி மாடல் அரசியல், கடந்த காலங்களைவிடக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றும் மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

-வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 31 மே 2022