மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 மே 2022

தமிழகம் மோடியை விரும்புகிறது: அமித்ஷா

தமிழகம் மோடியை விரும்புகிறது: அமித்ஷா

தமிழ்நாடு பிரதமர் மோடியை விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகத் தெலுங்கானாவிலிருந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி.

அவருக்குத் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, #கோ பேக் மோடி என்ற கேஷ் டேக் டிரெண்ட் ஆகும்.

இந்த முறையும், சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனாலும், கடந்த ஆண்டுகளைப் போலக் கடுமையான எதிர்ப்புகள் இல்லை. நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த ஹேஷ் டேக் மூலம் 2.15 லட்சம் ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன. அதுபோன்று #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது. இந்த ஹேஷ் டேக் மூலம் 4.5 லட்சம் ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன. அதன்படி எதிர்ப்பை காட்டிலும், வரவேற்பது தொடர்பான ட்வீட்கள் அதிகமாக இடம் பெற்றிருந்தன.

இதுமட்டுமின்றி, மாலை பிரதமர் சென்னை வந்தது முதல் நேரு உள் விளையாட்டு அரங்குக்கு சென்றது வரை தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பை பாஜகவினர் அளித்தனர்.

இந்நிலையில் பிரதமரின் தமிழக பயணத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, "பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது. தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விரும்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி தமிழ்நாடு! நேற்றைய வருகை மறக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 27 மே 2022