மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மே 2022

ஆஸ்திரேலியப் பிரதமருக்கு கோண்ட் ஓவியம் பரிசு - மோடி

ஆஸ்திரேலியப் பிரதமருக்கு கோண்ட் ஓவியம் பரிசு - மோடி

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 24) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு கோண்ட் ஆர்ட் ஓவியத்தைப் பரிசாக வழங்கினார்.

பர்தான் ஓவியம் அல்லது 'ஜங்கர் கலாம்' என்று அழைக்கப்படும் 'கோண்ட்' ஓவியத்துக்கு 1,400 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட வரலாறு உண்டு. கோண்ட் ஓவியங்கள் மிகவும் போற்றப்படும் பழங்குடியினரின் கலை வடிவங்களில் ஒன்றாகும். 'கோண்ட்' என்ற வார்த்தைக்கு 'பச்சை மலை' என்று அர்த்தம்.

பர்தான் ஓவியம் அல்லது 'ஜங்கர் கலாம்' என்றும் அழைக்கப்படும் 'கோண்ட்' வரலாற்றின் பரிணாமம், மத்திய இந்தியா முழுவதும் பரவியுள்ள சுமார் நான்கு மில்லியன் மக்கள் சமூகங்களிலிருந்து வந்தவை. புள்ளிகள் மற்றும் கோடுகளால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள், சுவர்கள் மற்றும் தளங்களில் சித்திரக்கலையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.

ஆஸ்திரேலியா தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமரிடம் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாய ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையின் கீழ் பன்முக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்து கலந்தாலோசித்தனர்.

இருதரப்பு உறவில் நேர்மறையான வேகத்தைத் தொடர இரு பிரதமர்களும் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தினர். மேலும் ஆஸ்திரேலியா பிரதமரை இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அதேபோல ஜப்பானியப் பிரதமருக்கு ரோகன் ஓவியம் வரைந்த மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பெட்டியையும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சஞ்சி கலைப் படைப்பையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

புதன் 25 மே 2022