டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

politics

தன்னுடைய அடுக்குமொழி வசனங்கள் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த டி.ராஜேந்தர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
மது, சிகரெட் என்று எந்த பழக்கமும் இல்லாமல் தனிமனித ஒழுக்கம் கொண்டவர் டி.ராஜேந்தர். இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சில் வலி ஏற்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோர்வுடனே காணப்பட்ட அவருக்கு வயிற்றுவலியும் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் பாலசிங்கம் சிகிச்சை அளித்து வருகிறார். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் மருத்துவர்கள் மேல் சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் தீவிர ஆலோசனை நடத்தினர். மறுபக்கம், இத்தனை நோய் உடலில் இருப்பது தெரிந்தும், பதற்றமே இல்லாமல் மருத்துவர்களின் ஜாதகத்தையும், தன்னுடைய ஜாதகத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வருகிறாராம் டி.ராஜேந்தர்.
அதே சமயத்தில் உயர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய மருத்துவர்கள் டி.ராஜேந்தருக்கு டெஸ்ட் மேல் டெஸ்ட் எடுத்திருக்கின்றனர். இதில், அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய புற்றுநோய் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பதால் அதைக் குணப்படுத்தி விடலாம். இதயத்தில் இருக்கும் அடைப்பையும் சரி செய்திடலாம். அதிக ரிஸ்க் இல்லை என்கிறார்களாம் மருத்துவர்கள்.
இருப்பினும், புற்றுநோய் மற்றும் இதயத்தில் பிளாக் என இரண்டு நோய்களுக்கும் இந்தியாவில் இருக்கும் மருத்துவ வசதிகளை விட அமெரிக்காவில் கூடுதல் வசதிகள் இருக்கும் என்பதால் அங்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். அதன்படி வெளிநாடு அழைத்துச் செல்வதற்கான வேலைகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
டி.ராஜேந்தர் தனது வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டவர். மன உறுதி கொண்டவர். அவர் நிச்சயம் இந்த நோயையும் வென்று மீண்டு வருவார்.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *