மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் மன தைரியத்துடன் இருக்கும் டி.ராஜேந்தரை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருக்கும் டி.ராஜேந்தர் தற்போது போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயிறு தொடர்பான சிகிச்சையில் சிறப்பானவரான மருத்துவர் பாலசிங்கம் சிகிச்சை அளித்து வருகிறார். ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே ஹார்ட்டில் பிளாக், தற்போது புற்று நோயும் ஏற்பட்டுள்ளதால், என்ன சிகிச்சை அளிக்கலாம், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஒருபக்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொருபக்கம் ஐசியு ரூமில் இருந்தபடியே டி.ராஜேந்தர் தனி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் டி.ராஜேந்தர். ஜோதிட

நிபுணராவார். இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். செய்துகொண்டும் இருக்கிறார்.

வீட்டில் இருந்து கிளம்புவது முதல் தன்னை பார்க்க வரும் விருந்தாளிகளை பார்ப்பது வரை அனைத்துக்கும் ஜோதிடம் பார்ப்பவர். தற்போது, மருத்துவமனையில் இருந்தபடியே ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உங்களின் பிறந்த தேதி என்ன, பிறந்த மாதம் என்ன, வருடம் என்ன, நேரம் என்ன, ராசி என்ன என கேட்டுக்கொண்டு கட்டம்போட்டு அவர்களின் ஜாதகத்தையும், தனது ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாராம். அவரது மன தைரியத்தையும், நம்பிக்கையையும், செயல்பாடுகளையும் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஹார்ட்டில் பிளாக் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை நினைத்து குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ள நிலையில், எனக்கு கட்டம் நல்லாருக்கு, யாரும் கவலைப்படாதீங்க, இன்னும் பல வருஷம் இருக்கிறது என்று மனைவி உஷா, மகன் சிலம்பரசன், மகள் இலக்கியா, தம்பி வாசுவுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறாராம். அந்த தன்னம்பிக்கைதானே டி.ராஜேந்தர்.

இந்தசூழலில், “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என மகன் சிம்பு கூறியுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 24 மே 2022