மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 மே 2022

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய சிந்தனை அமர்வு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மூன்று நாட்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றியும் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முக்கியமான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன.

அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் விவகாரக் குழு, டாஸ்க் ஃபோர்ஸ் 2024, அகில இந்திய பாதயாத்திரை ஒருங்கிணைப்புக்குழு ஆகிய முக்கியமான குழுக்களை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இன்று மே 24 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த குழுக்களை அறிவித்துள்ளார்.

இந்த மூன்று குழுக்களுமே சோனியா காந்தி தலைமையில் செயல்படும்.

அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், ஆனந்த் சர்மா, கேசி வேணுகோபால், ஜிதேந்திர சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா போன்றவர்களுக்கு அரசியல் விவகாரக் குழுவில் இடம் கொடுத்துள்ளார் சோனியா காந்தி.

அதேபோல 2004 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் டாஸ்க் ஃபோர்ஸ் 2024 குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய் ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சுனில் கணுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாத யாத்திரைக்கன ஒருங்கிணைப்புக் குழுவில் திக்விஜய் சிங், சச்சின் பைலட், ரன்வீர் சிங் பிட்டு, கே.ஜே. ஜார்ஜ், ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மூன்று குழுக்களிலுமே முக்கியமான அம்சங்கள் உள்ளன.

அரசியல் விவகார குழு ராகுல் காந்தியை முதன்மையாகக் கொண்டு செயல்படும் நிலையில் தேர்தல் படை 2024,இல் பிரியங்கா காந்திக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றுள்ள சுனில் தமிழ்நாட்டு அரசியலுக்கு நன்கு அறிந்தவர். 2014 ஆம் ஆண்டு பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோரோடு இணைந்து தேர்தல் பணியாறறியவர் சுனில். பிறகு 2016 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றினார். அப்போது மு. க. ஸ்டாலின் விதவிதமான உடைகளில் நமக்கு நாமே என்ற பயணத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டது சுனில் கொடுத்த யோசனைதான்.

திமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்த சுனில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இப்போது சுனில் பணியாற்றுகிறார்.

வேந்தன்

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

செவ்வாய் 24 மே 2022