மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 மே 2022

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

இன்று (மே 21) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம். 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ்காந்தி. இன்றோடு அவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆகிறது.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கும், திருவுருவப் படத்துக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ராஜீவ்காந்தி மகனுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. மன்னிப்பின் மதிப்பைப் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். இந்நேரத்தில் அவருடன் ஒன்றாக நேரம் கழித்ததை நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், உதகையில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். 3 நாள் சுற்றுப்பயணமாகக் கோவை மற்றும் நீலகிரி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கேயே மரியாதை செலுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. தற்போது அவரை கொன்ற கொலையாளிகளின் விடுதலையைத் திருவிழாவாகக் கொண்டாடும் போது இதயத்திலிருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம். கண்ணீர் விடுகிறோம். மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை. பழிவாங்குவது மனிதத்தன்மை இல்லை. மிருகங்களுக்குக் கூட பழிவாங்கும் எண்ணம் கிடையாது” என கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்ததற்கு கே.எஸ்.அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 21 மே 2022