மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 மே 2022

அடுத்த 25 ஆண்டுகள்: பாஜகவினருக்கு மோடி டார்கெட்!

அடுத்த 25 ஆண்டுகள்:  பாஜகவினருக்கு மோடி டார்கெட்!

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய சிந்தனை அமர்வு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று முடிந்த நிலையில், அதே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்று ( மே 20) நடைபெற்றது. வரும் மே 30 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று மூன்று வருடங்கள் என ஆக மொத்தம் எட்டு வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசிய பிரதமர் மோடி,

”இந்த மாதத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த எட்டு ஆண்டுகளும் சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளோம். சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை எட்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்துள்ளோம். இந்த எட்டு வருடங்கள் நாட்டின் சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகமே இன்று இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. அதேபோல் இந்திய மக்களும் பாஜக மீது தனி பாசம் வைத்துள்ளனர். நாட்டு மக்கள் நம்மை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். விரக்தியில் இருந்த நாட்டு மக்களை பாஜக 2014 இல் வெளியே கொண்டு வந்தது” என்று குறிப்பிட்ட மோடி தொடர்ந்து பேசுகையில்,

“சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் இருக்கும் நாம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்கவும், நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைக்கவும் பாஜகவுக்கு இது நேரம்” என்று கூறினார்.

மேலும் அவர், “சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக விஷத்தை புகுத்துவதற்காக சிறு சிறு பதற்றமான சம்பவங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிப் பிரச்சினைகளில் இருந்து உங்களைத் திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஆனால் நீங்கள் அவற்றை கடந்து நாட்டுக்காகவும் பாஜகவுக்காகவும் உழைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

வேந்தன்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 20 மே 2022