மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை 31 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று மே 18ஆம் தேதி விடுதலை செய்தது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை என்றும் அதே நேரம் இன்று காலை தமிழக காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது. முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டால், சட்டத்தின் மகத்துவத்தை யார் நிலைநாட்டுவார்கள்?

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் இன்று பதில் சொல்ல வேண்டும். இது பயங்கரவாதம் குறித்த மோடி அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

இந்த நாட்டின் முன்னாள் பிரதமரின் கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளையும் கொலையாளிகளையும் விடுவிக்க உடந்தையாக இருக்கப் போகின்றீர்களா? உங்கள் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும் அவர், "ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரிடமும் மட்டுமல்ல, இந்தியா மற்றும் இந்தியத்தன்மையின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் ஒவ்வொரு சக்திக்கும் எதிராகப் போராடுவதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் சோகமும் கோபமும் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ள சுர்ஜேவாலா,

"முன்னாள் பிரதமருடன் தற்போதைய அரசாங்கத்திற்கு விரோதம் இருந்ததால்... முன்னாள் பிரதமரின் கொலைகாரர்கள் சிறையில் இருந்து வெளியே வர அனுமதித்தது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் நல்லதல்ல" என்று கூறினார்.

அப்போது, "பிரியங்கா, ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தினர் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு எதிராக வெறுப்பு காட்டவில்லை" என்று பகிரங்கமாக கூறினார்களே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது...

“ராகுல், பிரியங்கா, சோனியா ஆகியோர் மகாத்மா காந்தி மற்றும் புத்தரின் தத்துவத்தை அவர்கள் நம்புகிறார்கள். உங்களுக்கு தீங்கு விளைவித்தவர்களை நீங்கள் மன்னிப்பீர்கள்... ஆனால், அது இந்த நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மாற்றாது" என்று பதிலளித்தார் ரந்தீப் சுர்ஜேவாலா.

வேந்தன்

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

வியாழன் 19 மே 2022