மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் பேரறிவாளன்

தலைவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் பேரறிவாளன்

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேரறிவாளன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் அளித்த முதல் பேட்டியில் தனது விடுதலைக்காகப் போராடிய அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி நேற்று (மே 18) சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தனது தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்.

பேரறிவாளன் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். அவர் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதல்வர் அளித்த பேட்டியில், “எழுவர் விடுதலையில் திமுக அரசு முனைப்போடு செயல்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் 494ஆவது வாக்குறுதியாகக் கொடுத்திருந்தோம். மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கதாகும். அதோடு இந்தத் தீர்ப்பின் மூலம் மாநில உரிமை மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரத்தைப் பார்த்து விட்டு மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

முதல்வரைத் தொடர்ந்து பேரறிவாளன் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். விடுதலைக்காக அதிமுக அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, பேரறிவாளன் விடுதலைக்கு 2018இல் அதிமுக அமைச்சரவையில் கொண்டுவந்த தீர்மானம்தான் அடித்தளமாக அமைந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 19 மே 2022