மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாப்பைக் கழற்ற சொன்ன விவகாரம் பூதாகரமானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே 11ஆம் தேதி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஆறு பேர் ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதினர்.

அப்போது அங்கு பணியிலிருந்த முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி வைத்துவிட்டு சீருடையில் தேர்வு எழுதும்படியும் கூறினார். இதையடுத்து ஆறு மாணவிகளும் ஹிஜாப்பை அகற்றிவிட்டுத் தேர்வு எழுதினர்.

பின்னர் வீட்டுக்குச் சென்ற அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மத நம்பிக்கையில் எப்படித் தலையிடலாம் என்று பள்ளி முன்பு திரண்டு வாக்குவாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியான நிலையில் மதவெறியைத் தூண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட தேர்வு கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான வைகோ, சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தமிழகம் சமூக நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியான மாநிலம். இங்கு பள்ளிக்கல்வி அமைச்சர் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை இல்லை என்று அறிவுறுத்தியும் பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிந்து வர தமிழகத்தில் எந்தவித தடையுமில்லை என்று பதிலளித்தும் இருக்கிறார்கள். அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில் களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சம்பவத்தன்று நடந்தது என்னவென்று மாவட்ட ஆசிரியர் சங்க வட்டாரத்தில் விசாரித்தோம்.

அவர்கள் கூறுகையில், “களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு அறைக்கு 20 மாணவர்கள் தேர்வு எழுதினர். முதன்மை தேர்வு கண்காணிப்பாளராக சரஸ்வதி இருந்தார். அன்றைய தினம் 11.30 மணியளவில் சம்பந்தப்பட்ட மாணவிகள் பிட் வைத்துக் கொண்டு தேர்வெழுதிக் கொண்டிருந்தனர். தேர்வு அறை பொறுப்பாளராக ஆண் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் மாணவிகளைச் சோதனை செய்ய முடியவில்லை. இதையடுத்துதான், கண்காணிப்பாளர் சரஸ்வதி ஆறு மாணவிகளையும் ஹிஜாப்பைக் கழற்றி வைத்துவிட்டு வந்து எழுதுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார். மாணவிகளும் ஹிஜாப்பைக் கழற்றி வைத்துவிட்டுத் தேர்வு எழுதினர். இதை மாணவிகள் அவர்களது பெற்றோரிடம் கூறியதும், அவர்கள் பள்ளிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியில் நடந்தவற்றைப் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறியபோது, மாணவிகள் செய்த காரியத்துக்காக மன்னிப்பு கேட்டனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதும், அது மத பிரச்சினையாக உருவெடுத்தது. இந்த தகவலை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி தேர்வு கண்காணிப்புப் பணியிலிருந்து சரஸ்வதியை நீக்கினார். சரஸ்வதி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த கோட்டை பள்ளியில் பெரும்பாலும் முஸ்லிம் மாணவிகள்தான் படிக்கின்றனர். அப்படி முஸ்லிம் மாணவிகளுடன் பழகும் ஆசிரியர் காரணமில்லாமல் எப்படி ஹிஜாப்பைக் கழற்றச் சொல்லுவார். மாணவிகள் செய்த தவறால்தான் அவர் ஹிஜாப்பைக் கழற்ற சொன்னார்” என்று கூறினர்.

-வணங்காமுடி

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

செவ்வாய் 17 மே 2022