மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 மே 2022

பேருந்து கட்டணம் உயர்வா?: பயணித்தபடி பேட்டியளித்த அமைச்சர்!

பேருந்து கட்டணம் உயர்வா?: பயணித்தபடி பேட்டியளித்த அமைச்சர்!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாகத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

குன்னம் சட்டமன்றத் தொகுதி, வீரமநல்லூர், கீரனூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வழித்தடமாக அகரம்சீகூரில் இருந்து வயலூர், கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர்,பரவாய், கல்லம்புதூர்,கிளியூர், அந்தூர் வழியாக குன்னம் வரை புதிய வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.

அதுபோன்று, அரியலூர்- வேப்பூர் வழிதடத்தில் கூடுதல் அரசுப் பேருந்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேருந்தில் பயணித்த அமைச்சர் சிவசங்கர் மாணவிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேருந்தில் பயணித்தபடியே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அதில், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட இருக்கின்றன. இதுபோன்று அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற சூழலில், அந்த மாநிலங்களுக்கும் நம்முடைய மாநிலத்திற்கும் இடையில் இயங்கக்கூடிய தமிழக போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நீண்டதூர பேருந்துகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதை வைத்துக்கொண்டு தமிழகத்திலும் கட்டண உயர்வு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் இதுவரை இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் எங்களுக்கு வழங்கவில்லை.

டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதை எல்லோரும் அறிவார்கள். இப்படிப்பட்ட சூழலில், வெளிமாநிலங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வருகிறது. எனவே கட்டண உயர்வு என்று தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இவரது பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சியில் பேசிய அவர், பேருந்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல்வரும், போக்குவரத்து துறை அமைச்சரும் முடிவெடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்தச்சூழலில் அமைச்சர் சிவசங்கர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 16 மே 2022