மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

பெண்களின் அதிகாரம்: முக்கிய உத்தரவு!

பெண்களின் அதிகாரம்: முக்கிய உத்தரவு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையிலும் கூட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் பெண்கள் முழுமையாக பங்கேற்க முடிகிறதா என்று கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

ஏனென்றால் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் மற்றும் தந்தைமார்கள் கலந்து கொள்ளும் வழக்கம் பல்வேறு இடங்களிலும் நிலவி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சென்னை மாநகராட்சி. அதாவது சென்னை மாநகராட்சி, பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு - மண்டல கூட்டங்களுக்கு வருவதை தடை செய்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

இந்த உத்தரவை தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்ற வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வாசுகி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், " உள்ளாட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதிகளின் அதிகார உறுதிப்படுத்துதல் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது வரவேற்கத்தக்கது.

இதர மன்றங்களும் இதனை செய்திட வேண்டும். ஆண் கவுன்சிலர்களின் உறவினர்கள் வருவதில்லை, வந்தாலும் அனுமதி இல்லை. பெண்ணால் தனித்து இயங்க முடியாது என்கிற ஆணாதிக்க மனோபாவம்தான் இது.

இந்த பினாமி முறை கூடாது என துவக்கத்திலிருந்தே மாதர் சங்கம் வலியுறுத்தி வந்தது. தாமதமாக வந்தாலும் நல்ல முயற்சி இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

வேந்தன்

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

ஞாயிறு 15 மே 2022