மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

மின், பேருந்து கட்டணம், சொத்து வரி உயர்வு: அமைச்சர் நேரு பதில்!

மின், பேருந்து கட்டணம், சொத்து வரி உயர்வு: அமைச்சர் நேரு பதில்!

சொத்துவரி, பேருந்து, கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி அரிஸ்டோ மேம்பாலப் பணிகள் மற்றும் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகளை இன்று (மே14) தொடங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் பேருந்து மற்றும் மின் கட்டணம் உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயரப்போகிறது என்று அவர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் முடிவு செய்து சொல்வார்கள். எந்தக் கட்டணம் உயரப்போகிறது என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்.

ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக பேசிய அவர், “சென்னையில் சொத்து வரியை உயர்த்தி 22 ஆண்டுகள் ஆகிறது. மற்ற இடங்களில் 13, 14 வருடங்கள் ஆகிறது. உள்ளாட்சி நிர்வாகமே சுத்தமாக அடிபட்டுப் போயிருக்கிறது. சிலர் வரியைக் கட்டுவதில்லை. சிலர் நான்கு மாடி கட்டிக் கொண்டு இரண்டு மாடிக்குத்தான் வரி கட்டுகிறார்கள். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். நகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்காக நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் செய்திருக்கிறோம். அதுவும் மக்களுக்குச் செலவு செய்வதற்காக தானே தவிர இதில் வேறு ஒன்றும் இல்லை.

இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இவ்வளவு நகரப்பகுதிகள் இல்லை. மக்கள் தொகையின் அடிப்படையில் 53 சதவிகிதம் பேர் நகர்ப்புறத்துக்கு வந்துவிட்டனர். மழைநீர் வடிகால், கழிவு நீர் வடிகால், சாலை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் கேட்கின்றனர். கேட்பது தவறு கிடையாது. உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்கள் சொந்த நிர்வாகத்தில் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் வருஷம் தோறும் வரி உயர்வு செய்திருக்கிறோம்” என்று கூறினார் அமைச்சர் நேரு.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா? அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா?  அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் ...

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் அடுத்த அதிர்ச்சி!

சனி 14 மே 2022