மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் பலி!

அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் பலி!

அரசு பேருந்தில் பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநருக்கு ரூ.10 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் நடத்துநர் பெருமாள்(54). விழுப்புரம் பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற விழுப்புரம் பணிமனை பேருந்தில் பணியிலிருந்தார். மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் பயணித்த பயணி முருகனுக்கும் நடத்துநர் பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பயணச்சீட்டு எடுக்கச் சொல்லியபோது தகராறு ஏற்பட்டது. இதில் போதையில் பயணித்த அந்த பயணி நடத்துநரை ஒருமையில் திட்டியதோடு மட்டுமில்லாமல் அவரை தாக்கியிருக்கிறார். இதில் காயம் அடைந்த நடத்துநர் மேல் மருவத்தூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “இன்று அதிகாலை 3.15 மணியளவில் விழுப்புரம் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்றது. அந்த பேருந்தில் மதுராந்தகத்தில் குடிபோதையில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல் மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் தி.பெருமாள் பிள்ளையின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று விருதுநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர்கள் மீது கல்லூரி மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பயணி ஒருவர் தாக்கி நடத்துநர் உயிரிழந்திருப்பது போக்குவரத்து ஊழியர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

சனி 14 மே 2022