மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் : துணைவேந்தர் பதில்!

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் : துணைவேந்தர் பதில்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட நிகழ்ச்சிக்குச் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு 500 ரூபாய் கவரில் வைத்துக் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 37ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாணவர்களுக்குப் பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவுக்காகச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் கிட் ஒன்று ஃபையில் வடிவில் வழங்கப்பட்டது. அந்த ஃபையில் பதிவாளரின் சார்பில் ஒரு கவர் வைக்கப்பட்டிருந்தது. அதில் 500 ரூபாய் பணமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஃபைலை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

500 ரூபாய் பணம் வைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த கோவை பிரஸ் கிளப், பத்திரிகையாளர்களுக்குப் பணம் விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பல்கலைக்கழகம் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு ஆளுநர் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் ட்விட்டர் கணக்கை டேக் செய்துள்ளது.

கடந்த காலங்களில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது பத்திரிகையாளர்களுக்கு இதுபோன்று லஞ்சம் கொடுத்ததில்லை. இது முற்றிலும் விசித்திரமானது. இந்த பொறுப்பற்ற நடத்தைக்குப் பல்கலை நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் கூறினர்.

தொடர்ந்து மதியம் பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் துணைவேந்தர் காளிராஜை சந்தித்து பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். எப்போதும் இல்லாத புதிய நடைமுறையாக இருக்கிறது என கூறி அந்த 500 ரூபாய் கவரை துணைவேந்தரிடம் கொடுக்க முயன்றனர்.

அப்போது யார் இப்படி செய்தது என்று அங்கிருந்தவர்களிடம் துணை வேந்தர் கேள்வி எழுப்பினார். இந்த கவரை பிஆர்ஓ அலுவலகத்தில் இருந்து கொடுத்தார்கள். அதில் பல்கலைக் கழக ரிஜிஸ்டர் என்று உள்ளது எனப் பத்திரிகையாளர்கள் கூறினர்.

அதற்கு, ட்ராவல் அலோவன்ஸ்க்காக வைத்திருக்கலாம் என்றார் துணைவேந்தர். இதை ஏற்க மறுத்த பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேருந்து மூலம் அழைத்து வந்தீர்கள். அதுதான் ட்ராவல் அலோவன்ஸ், இது எதற்கு எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அந்த கவரை தன்னுடன் இருந்த பாதுகாவலரிடம் கொடுத்துச் செல்லும்படி கூறிய துணை வேந்தர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்த பின் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022