மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்: ஈபிஎஸ்

மின் மற்றும் போக்குவரத்து கட்டணம் உயரும்: ஈபிஎஸ்

தமிழகத்தில் பேருந்து, மின், பால் விலை உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு ஆட்சியில் இல்லை என்றால் ஒரு பேச்சு என நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் 16 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டனர். காரணம் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இதனை அரசு ஊழியர்கள் மிகவும் நம்பினார்கள். திமுக அவர்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துள்ளது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை மறந்துவிட்டது” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பல்வேறு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். இதனால் இன்னும் கூடுதல் செலவாகும். ஆகவே விரைவில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவார்கள்.

அதுபோன்று மின் கட்டணத்தையும் உயர்த்துவார்கள். காரணம் அத்தனையும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பால் விலையையும் உயர்த்த போகின்றனர்” என்று கூறினார்.

நேற்று தமிழக அரசு அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 11ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 4ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், "போக்குவரத்துக் கழகங்களில் பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளாகப் பணி நியமன ஆணை வழங்கவில்லை. இது தொடர்பான கோரிக்கை ஏற்கப்பட்டு மே 14 முதல் முதற்கட்டமாக முதலமைச்சரால் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு முறை சிறப்பு ஊதியமாக 300 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்த தொகை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று இந்த பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்கள் 8 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அரசு சார்பில் முதல் கட்டமாக 1.9.2019ல் இருந்து, 2 சதவிகித உயர்வும், 1.1.2022ல் இருந்து அடுத்த கட்டமாக 3 சதவிகிதம் உயர்வும் சேர்த்து மொத்தமாக 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022