மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

மேடவாக்கத்தில் புதிய மேம்பாலம் திறந்துவைப்பு!

மேடவாக்கத்தில் புதிய மேம்பாலம் திறந்துவைப்பு!

சென்னை மக்களின் குறிப்பாக மேடவாக்கம் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மேடவாக்கம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்பது. தற்போது மேம்பாலம் கட்டும்பணி நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 13) திறத்து வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் சாலையாக மேடவாக்கம் சாலை இருந்தது. வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்ல வேண்டும் என்றாலும், சோழிங்கநல்லூரிலிருந்து தாம்பரம் செல்ல வேண்டும் என்றாலும், மேடவாக்கம் சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இதன் காரணமாக மேடவாக்கம் சாலை பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். காலை, மாலை அவ்வழியே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இங்குத் தமிழக அரசு சார்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே மேம்பாலத்தின் ஒரு பகுதியான வேளச்சேரி - தாம்பரம் ஒருவழி பாலம் கடந்தாண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மறுபக்கம் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வழியில் அமைக்கப்பட்ட 2.03 கி.மீ. நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 13) திறந்து வைத்தார்.இது சென்னையின் மிக நீளமான பாலமாகும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21 கோடி மதிப்பில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

பாலத்தைத் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இன்று இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022