மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

இலங்கைக்குப் புதிய பிரதமர்: ரணிலுக்கு ராஜபக்சே வாழ்த்து!

இலங்கைக்குப் புதிய பிரதமர்: ரணிலுக்கு ராஜபக்சே வாழ்த்து!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நேற்று (மே 12) பொறுப்பேற்றார். அவருக்குப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் வன்முறை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைதியைக் கொண்டுவர இலங்கை எங்கும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் புதிய பிரதமரை இந்த வாரத்துக்குள் நியமிப்பேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.

அப்போது யார் புதிய பிரதமர் என்று கேள்வி எழுந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பெலவெகய தலைவா் சஜித் பிரேமதாச பிரதமராகப் பதவியேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று கூறி வந்த கோத்தபய ராஜபக்சே பழமைவாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக உள்ள ரணில் விக்ரமசிங்கை சந்தித்து பிரதமராகப் பொறுப்பேற்கக் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி நேற்று மாலை, பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்கே. அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அதிபர் கோத்தபய முன்னிலையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பிரதமருக்கு வாழ்த்துகள். மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் நம் நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை மேற்கொள்ள முன்வந்தவர் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், ட்விட்டர் வாயிலாக புதிய பிரதமருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பழைமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே, 2018 அக்டோபரில் அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறிசேனாவால் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

2020 நாடாளுமன்றத் தோ்தலின்போது ரணில் உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த யாரும் பெற்றி பெறவில்லை. அவரது கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து, தேசிய வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு நியமன எம்.பி பதவி ரணில் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தச் சூழலில் இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17ஆம் தேதி விவாதம் நடத்த இலங்கை அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022