மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

பூஸ்டர் டோஸ் செலுத்தும் வழிமுறைகளில் மாற்றம்!

பூஸ்டர் டோஸ் செலுத்தும் வழிமுறைகளில் மாற்றம்!

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா அலை பரவத் தொடங்கியது. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். மூன்றாம் அலையில் முதல் இரண்டு அலை அளவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், உருமாறிய கொரோனா தொற்று அவ்வப்போது அச்சத்தை ஏற்படுத்தியது. நான்காம் அலை ஜூலை மாதத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிநாடு செல்பவர்கள் தேவைப்பட்டால் பூஸ்டர் டோஸை அந்தந்த நாடுகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களைத் தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குப்பின் ஒன்பது மாத கால இடைவெளிக்குப் பிறகு தான் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் வெளிநாடு செல்பவர்கள் அந்தந்த நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளலாம் என்று தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த வசதியானது கூடிய விரைவில் கோவின் போர்டலில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளிநாடு செல்பவர்களுக்காக கொரோனா இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இடைப்பட்ட ஒன்பது மாத கால இடைவெளியை மூன்று மாதமாக மத்திய அரசு குறைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை எந்த ஓர் அதிகாரபூர்வத் தகவலும் வெளியிடவில்லை.

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வெள்ளி 13 மே 2022