மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

இலங்கைக்கு நிவாரணம்: தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்!

இலங்கைக்கு நிவாரணம்: தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்!

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக பேக் செய்யப்படும் பைகளில் “தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்” என்று எழுதப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்பிலான 137 உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான பால்பவுடர் என 123 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

உணவுத்துறை மூலமாக அரிசி கொள்முதல் ஆவின் நிறுவனம் மூலமாகப் பால் பவுடர், சுகாதாரத் துறை மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்காகப் பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. பேக்கிங் பணி முடிந்தவுடன் விரையில் இலங்கைக்குச் சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சூழலில் இலங்கைக்கு அனுப்பப்படும் பேக்கிங் பைகளில், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு முத்திரை இடம்பெற்றுள்ளது. அதோடு, தமிழ்நாடு மக்களிடமிருந்து, அன்புடன் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் என எழுதப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியில் இதுபோன்று நிவாரண பொருட்கள் அல்லது பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் பைகளில் அந்தந்த கட்சியின் சின்னம், தலைவர் பெயர்கள் இடம் பெறும். இந்தச்சூழலில் இலங்கைக்கு அனுப்பும் பொருட்களில் தமிழ்நாடு மக்களிடமிருந்து, அன்புடன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கைக்கு உதவ நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வியாழன் 12 மே 2022