மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு!

பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு!

பசுகளுக்கு காப்பகம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது உத்தரப் பிரதேச மாநிலமும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தான். அங்கு வெளியில் சுற்றித் திரியும் பசுக்களுக்காகக் காப்பகங்கள் அமைக்க ஆட்சி அமைந்தவுடன் உத்தரவிட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத். மாடுகளுக்கு தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் உத்தரவிட்டிருந்தார். அதோடு ஆம்புலன்ஸ், கால் செண்டர் உள்ளிட்டவையும் பசுக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகத்திலும் பலரும் தானமாகக் கோயில்களுக்கு வழங்கிய மாடுகளுக்குக் கோசாலைகள் இருந்தாலும், முந்தைய காலங்களில் சில காசோலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்ததுண்டு.

இந்த சூழலில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது பசுக்கள் பாதுகாப்புக்கும் அறிவிப்புகள் வெளியாகின. அதில், 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

திருக்கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் கோயில் பதாகை சுந்தர ராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி கோசாலை கட்டுவதற்கான இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டார். அவருடன் பால்வளத் துறை அமைச்சர் நாசரும் சென்றிருந்தார். இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, கோயில்களுக்குச் சொந்தமான யானைகள் மற்றும் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதுபோன்று தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வரின் வழிகாட்டுதலின் படி, நடந்த முடிந்த 2022-23 தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, திருக்கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள அருள்மிகு சுந்தர் ராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குச் செந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாகக் கோசாலை ஏற்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர் சா.மு.நாசருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக உபி பாணியில் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வியாழன் 12 மே 2022