மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

விரைவில் இலங்கைக்கு புதிய பிரதமர்: கோத்தபய ராஜபக்ச

விரைவில் இலங்கைக்கு புதிய பிரதமர்: கோத்தபய ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது சகோதரர் அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்த வாரத்திற்குள் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பதாகத் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் எவரும் இல்லாத இளம் அமைச்சரவையை நான் நியமிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார தோல்வி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகப் பரவலான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இதனால் கொழும்புவின் வீதிகளில் துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே சமயத்தில், பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில், இந்த வாரத்தில் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பதாக, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சகோதரர் அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு பிரதமரையும், அவர் தலைமையிலான அமைச்சரவையையும் நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று நேற்று கோத்தபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மற்றும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரணில் விக்ரமசிங்க்கை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசியதாகவும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோத்தபய ராஜபக்ச கோரிக்கை விடுத்ததாகவும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரணில் விக்ரமசிங்க இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வியாழன் 12 மே 2022