மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 மே 2022

மீண்டும் செயல்பட தொடங்கிய கொழும்பு துறைமுகம்!

மீண்டும் செயல்பட  தொடங்கிய கொழும்பு துறைமுகம்!

கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தச்சூழலில் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்பட்டு, இலங்கை வன்முறை களமாக மாறியுள்ளது. இதனால் அங்கு 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 200 பேர் காயமடைந்துள்ளனர். நாளை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுபோன்று பதற்றம் நீடித்து வரும் சூழலில் நேற்று கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். பிராந்திய டிரான்ஷிப்மென்ட் துறைமுகத்தின் அனைத்து முனையங்களிலும் வேலை செய்வதை நிறுத்தினர். இதன் காரணமாகக் கப்பல்கள் வெளிநாடுகளுக்கு புறப்படாமல் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் இன்று பிற்பகல் அதாவது 23 மணி நேரப் பணி புறக்கணிப்பிற்குப் பின்னர் துறை முக ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். இதனால், கப்பல்கள் தாமதமாகப் புறப்பட்டதன் விளைவு, கப்பல் போக்குவரத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது என்றும் சரக்குகளைத் தாமதமாக விநியோகித்தல் மட்டுமின்றி பிற துறைமுகங்களில் நிறுத்தும் வாய்ப்புகளை இழந்தது என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சவுக்கு பாதுகாப்பு

தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளார் ராஜபக்ச. அங்குள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன், ராஜபக்ச அவர் விரும்பும் இடத்துக்கு மாறுவார் என்று பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், முன்னாள் அதிபர் என்ற அடிப்படையில் ராஜபக்சவுக்கு ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். இலங்கை அதிபராக 2005 மற்றும் 2015ஆம் ஆண்டு வரை பதவி வகித்த ராஜபக்ச, 2019ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

புதன் 11 மே 2022