மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 மே 2022

அதிக கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏக்கள்: முதலிடத்தில் யார்?

அதிக கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏக்கள்: முதலிடத்தில் யார்?

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 22 நாட்கள் நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்றுடன் (மே 10) நிறைவடைந்தது.

துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு, உறுப்பினர்கள் கேள்வி, முதல்வர் - அமைச்சர்கள் பதில், விதி எண் 110இன் கீழ் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் என சட்டப்பேரவை நடந்து முடிந்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையைச் சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தார்.

அதுபோன்று இந்தக் கூட்டத்தொடரில் யார் அதிகம் கேள்வி எழுப்பியது, யார் அதிகம் பதில் சொன்னது உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளார் அப்பாவு.

அதில், "இந்தக் கூட்டத்தொடரில் அதிக அளவு மூல வினா கேட்ட உறுப்பினர்களில், திமுகவைச் சேர்ந்த ப.சிவகுமார் என்ற தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளைக் கேட்டு முதலிடத்தில் உள்ளார்.

பாமக சட்டமன்றக் குழுத் தலைவரான ஜி.கே.மணி 8,312 கேள்விகளைக் கேட்டு இரண்டாவது இடத்திலும், 5,425 கேள்விகளைக் கேட்டு திமுக உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா மூன்றாவது இடத்திலும், 5,036 கேள்விகளைக் கேட்டு பாமகவைச் சேர்ந்த அருள் நான்காவது இடத்திலும், 2,937 கேள்விகளைக் கேட்டு பாமகவைச் சேர்ந்த ச.சிவகுமார் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

அதுபோன்று உறுப்பினர்களின் கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்குப் பதிலளித்து முதலிடத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 14 கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலா 13 கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு 12 கேள்விகளுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தலா 11 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 11 மே 2022